ADDED : ஜன 19, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்தூர்பேட்டை: இடப் பிரச்னை தொடர்பாக மோதலில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை அடுத்த நல்லாளக்குப்பம் கிராமத்தில் உள்ள 1.70 ஏக்கர் குட்டை புறம்போக்கு நிலம் சம்பந்தமாக இரு பிரிவினரிடையே முன்விரோதம் உள்ளது.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரல் நல்லாளங் குப்பத்தை சேர்ந்த செல்லதுரை, 57; அவரது மகன் செல்வமணி, 31; மற்றொரு தரப்பை சேர்ந்த வீரப்பன், 55; பன்னீர், 50; ராம்ராஜ், 40; ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

