/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
5 பல்சர் பைக்குகள் திருட்டு: வாலிபர் கைது
/
5 பல்சர் பைக்குகள் திருட்டு: வாலிபர் கைது
ADDED : மே 03, 2025 02:06 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே பல்சர் பைக்குகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் நேற்று குளத்துார் கூட்ரோடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், போலீஸ் நிலைத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர் விரியூர் கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஜான் கென்னடி,28; என தெரிய வந்தது. மேலும், சங்கராபுரம் சுற்று வட்டார பகுதியில், 5 பல்சர் பைக்குகளை திருடியது கண்டறியப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 5 பைக்குள் பறிமுதல் செய்யப்பட்டன.