தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பட்டாசு வெடித்த தகராறு 50 பேர் மீது வழக்கு பதிவு

பட்டாசு வெடித்த தகராறு 50 பேர் மீது வழக்கு பதிவு

பட்டாசு வெடித்த தகராறு 50 பேர் மீது வழக்கு பதிவு


UPDATED : நவ 11, 2026 05:26 PM

ADDED : நவ 11, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 05:26 PM ADDED : நவ 11, 2026 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரிஷிவந்தியம்: பாசாரில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தகராறில் 50க்கும் மேற்பட்டோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்தவர் அழகுசுந்தரம் மகன் குபேந்திரன்,34; இவரும், இவரது உறவினர் திருமூர்த்தி என்பவரும் கடந்த 9ம் தேதி பாசார் மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது, பாசாரை சேர்ந்த அய்யப்பன் மற்றும் சிலர் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த குபேந்திரன், நடுரோட்டில் பட்டாசு வெடிக்க வேண்டாம் என கூறினார். அப்போது, அய்யப்பன் தரப்பினர் சேர்ந்து ஜாதி பெயரை கூறி திட்டி, மிரட்டினர். மேலும், அய்யப்பன் தரப்பினர் 50க்கும் மேற்பட்ட நபர்களுடன் திருமூர்த்தியின் வீட்டிற்கு சென்று கதவு, ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து குபேந்திரன் அளித்த புகாரின் பேரில், கோவிந்தன் மகன் அய்யப்பன்,20; வேலு மகன் தினேஷ்,20; 17 வயது சிறுவன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us