/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 510 வீடுகள்: கலெக்டர் கலெக்டர் பிரசாந்த் தகவல்

ADDED : நவ 20, 2024 06:45 AM

ரிஷிவந்தியம் : குடிசை வீடுகளில் வசிக்கும் மக்கள் சிமென்ட் வீடு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் சிமென்ட் வீடு கட்டுவதற்காக ரூ.3.50 லட்சம் நிதியுதவி, 4 தவணைகளாக பிரித்து வழங்கப்படுகிறது. கலைஞரின் கனவு இல்லம் திட்டம் பணி ஆணை பெற்ற பயனாளிகள் தற்போது வீடு கட்டி வரும் நிலையில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சிமென்ட் மற்றும் கம்பிகளும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ரிஷிவந்தியம் பி.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளுக்கு கம்பிகள் பிரித்து அனுப்பும் பணியை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்து கூறியதாவது:
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள 60 ஊராட்சிகளில், தற்போது 49 ஊராட்சிகளில் மட்டும் 17.85 கோடி ரூபாய் மதிப்பில் 510 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மிகவும் முக்கியமானது. ஊராட்சிகள் வாரியாக கம்பிகள் கொண்டு சென்று, பயனாளிகளுக்கு தனித்தனியே பிரித்து வழங்க வேண்டும். வீடுகள் தரமாக கட்டப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்வதுடன், பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்தார்.