/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோமுகி அணையில் இருந்து 5,300 கன அடி நீர் வெளியேற்றம்
/
கோமுகி அணையில் இருந்து 5,300 கன அடி நீர் வெளியேற்றம்
கோமுகி அணையில் இருந்து 5,300 கன அடி நீர் வெளியேற்றம்
கோமுகி அணையில் இருந்து 5,300 கன அடி நீர் வெளியேற்றம்
ADDED : டிச 03, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கோமுகி அணையில் இருந்து நேற்று 5,300 கன அடி நீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.
கல்வராயன் மலை பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக கோமுகி அணைக்கு வினாடிக்கு 7,800 கன அடி நீர் வரத்துவங்கியது.
இதனால், 46 அடி உயரத்திற்கு கொள்ளளவு கொண்ட அணையில் 45 அடிக்கு நீர் நிரம்பியது.
அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கவே, நேற்று பகல் 2 மணிக்கு அணையில் இருந்த 5 ஆயிரத்தி 300 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கரையோர கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.