/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஜமாபந்தி முகாமில் 534 மனுக்கள்
/
ஜமாபந்தி முகாமில் 534 மனுக்கள்
ADDED : மே 14, 2025 12:40 AM
சின்னசேலம்: சின்னசேலம் ஜமாபந்தி முகாமில், இரு தினங்களில், 534 மனுக்கள் பெறப்பட்டன.
கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமி தலைமையில் சின்னசேலம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் நடந்து வருகிறது. தாசில்தார் பாலகுரு முன்னிலை வகிக்கிறார்.
இந்த முகாம் சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் ஆறு நாட்கள் நடக்கிறது. நேற்று நடந்த முகாமில் வடகனந்தல், பால்ராம்பட்டு, மாத்துார், வடக்கனந்தல், கிழக்கு, மேற்கு, கச்சிராயபாளையம், பரிகம், ஏர்வாய்பட்டினம், மல்லியம்பாடி, பொட்டியம் ஆகிய கிராம மக்கள் கலந்து கொண்டு, மொத்தம் 337 மனுக்களை வழங்கினர். வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். முதல் நாள் முகாமில் பெறப்பட்ட 197 மனுக்களுடன் இதுவரை மொத்தம், 534 மனுக்கள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில்,தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

