/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
5.5 லட்சம் குடற்புழுநீக்க மாத்திரைகள் மாவட்டம் முழுதும் இன்று வழங்கல்
/
5.5 லட்சம் குடற்புழுநீக்க மாத்திரைகள் மாவட்டம் முழுதும் இன்று வழங்கல்
5.5 லட்சம் குடற்புழுநீக்க மாத்திரைகள் மாவட்டம் முழுதும் இன்று வழங்கல்
5.5 லட்சம் குடற்புழுநீக்க மாத்திரைகள் மாவட்டம் முழுதும் இன்று வழங்கல்
ADDED : ஆக 10, 2025 11:41 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (11ம் தேதி) மற்றும் 18ம் தேதி, இரண்டு நாட்கள் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;
இந்தியாவில் மக்கள் தொகையில் 24 சதவீதம் பேர் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இப்பரவல் 25 சதவீதம் உள்ளது. எனவே இவ்வாண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் இன்று (11ம் தேதி) அனைத்து பள்ளிகள், கல்லுாரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி நிலையங்கள் என மொத்தம் 2,528 மையங்களில் வழங்கப்படுகிறது. விடுபட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 18ம் தேதி அன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது.
1 முதல் 19 வயது உடைய 4,48,969 குழந்தைகள், வளர்இளம் பருவத்தினர்கள், 20 முதல் 49 வயதிற்குட்பட்ட1,01,795 பெண்கள் என மொத்தம் 5,50,764 நபர்களுக்கு குடற்புழுநீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இதில் பொது சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித் துறை பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாத்திரை காலை 9:௦௦ மணி முதல் மதியம் 2:௦௦ மணி வரை காலை உணவு அல்லது மதிய உணவு சாப்பிட்ட பிறகு, இந்த மாத்திரை (அல்பெண்டாசோல்) நன்கு கடித்து மென்று, சுவைத்து சாப்பிட வேண்டும். 1-2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரை, 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கும், 20 முதல் 30 வயது பெண்களுக்கு ஒரு மாத்திரை வழங்கப்பட உள்ளது.
இதன்மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை நோய் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்படுத்தப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து குடற்புழு மாத்திரைகளை தகுதியுள்ள அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.