/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில், சாராயம் விற்ற 6 பேர் மீது வழக்கு
/
மதுபாட்டில், சாராயம் விற்ற 6 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 15, 2024 02:20 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மதுபாட்டில் மற்றும் சாராயம் விற்றது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சாராயம் மற்றும் மதுபாட்டில் விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வெவ்வேறு பகுதிகளில் சாராயம் விற்றது தொடர்பாக, கரடிசித்துார் தேவேந்திரன், ரமேஷ் ஆகிய இருவர் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், மதுபாட்டில் விற்றது தொடர்பாக, சின்ன சேலம் சத்தியமூர்த்தி, சொரக்கபாளையம் பெரியசாமி மனைவி சரோஜா, ஏமப்பேர் சிவக்குமார், வாணவரெட்டி மண்ணாங்கட்டி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்தனர்.