/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சொத்து தகராறில் மூதாட்டி கொலை திருக்கோவிலுார் அருகே 6 பேர் கைது
/
சொத்து தகராறில் மூதாட்டி கொலை திருக்கோவிலுார் அருகே 6 பேர் கைது
சொத்து தகராறில் மூதாட்டி கொலை திருக்கோவிலுார் அருகே 6 பேர் கைது
சொத்து தகராறில் மூதாட்டி கொலை திருக்கோவிலுார் அருகே 6 பேர் கைது
ADDED : நவ 04, 2024 06:55 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே சொத்து தகராறில் மூதாட்டியை அடித்து கொலை செய்த ௬ பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த எல்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி, 47; இவரது அண்ணன்கள் நடேசன், 54; அய்யனார். இவர்களுக்குள் சொத்து பிரிப்பதில் பிரச்னை இருந்து வந்தது.
நேற்று முன்தினம் நாராயணசாமி, அவரது மனைவி லட்சுமி, 40; மாமியார் அங்கம்மாள், 70; ஆகியோர் அவர்களது வீட்டின் முன்பு நின்றிருந்தனர்.
அப்போது, எதிர்வீட்டில் வசிக்கும் அண்ணன் நடேசன், அவரது மனைவி லதா, 40; மகன் அருண், 25; உறவினர்களான காசிவேல் 57; அவரது மனைவி ரமாதேவி, 45; மகன்கள் திருமலை, 25; திருநாவுக்கரசு, 23; திருமலை மனைவி அனிதா, 25; அருண் மனைவி திருமதி, 22; ஆகியோர் சேர்ந்து, 3 பேரையும் சரமாரியாக தாக்கினர்.
இதில் காயமடைந்த மூவரும் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அங்கம்மாள் இறந்தார்.
இதுகுறித்து புகாரின்பேரில், நடேசன் உள்ளிட்ட 9 பேர் மீது, திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து, நடேசன், காசிவேல், திருநாவுக்கரசு, திருமலை, ரமாதேவி, அருண் 6 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.