/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 அரசு பள்ளிகள் மூடல்
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 அரசு பள்ளிகள் மூடல்
ADDED : ஆக 14, 2025 12:51 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 அரசு துவக்க பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 208 அரசு பள்ளிகள் சமீபத்தில் தற்காலிகமாக மூடப்பட்டன. குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததால் பள்ளிகள் மூடப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஒற்றை இலக்கு எண்ணில் மாணவர்கள் பயின்ற கல்வரயான்மலை ஒன்றியத்தில் உள்ள விளாநெல்லி மற்றும் வேதுார் அரசு துவக்கபள்ளிகள், மேல்பரிகம் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி, ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள மேட்டுக்குப்பம் மற்றும் ரெட்டியார்பாளையம் அரசு துவக்க பள்ளிகள், உளுந்துார்பேட்டை ஒன்றியத்தில் உள்ள கூத்தனுார் தாங்கல் அரசு துவக்க பள்ளி என மொத்தமாக 6 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.