/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊரக வளர்ச்சித்துறைக்கு 6 புதிய வாகனங்கள்
/
ஊரக வளர்ச்சித்துறைக்கு 6 புதிய வாகனங்கள்
ADDED : ஜூலை 17, 2025 12:40 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட 6 புதிய வாகனங்கள் செயல்பாட்டினை கலெக்டர் துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி வரும் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி இயக்குநர் நிலையில் பணிபுரிந்து வரும் அலுவலர்கள் பயன்பாட்டிற்காக, ரூ. 41.15 மதிப்பில் 6 புதிய வாகனங்கள் தமிழக அரசு வழங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 6 வாகனங்களின் செயல்பாட்டினை கலெக்டர் பிரசாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

