/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்
ADDED : செப் 16, 2025 11:44 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 சப் இன்ஸ்பெக்டர்கள் மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசில் சப் இன்ஸ்பெக்டர்களாக குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் அமைப்பு பிரிவில் பணிபுரிந்த கனகவள்ளி, உளுந்துார்பேட்டை ராஜேஷ் ஆகியோர் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் கச்சிராயபாளையம் சபரிமலை, தியாகதுருகம் ஜெயமணி ஆகியோர் திருக்கோவிலுார் மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கும், மாவட்ட குற்றப்பதிவேடு பணியகத்தில் பணிபுரிந்த துர்காதேவி, சங்கராபுரத்தில் பணிபுரிந்த தனசேகர் ஆகிய இருவரும் உளுந்துார்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாவட்ட எஸ்.பி., மாதவன் பிறப்பித்தார்.
கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை மற்றும் திருக்கோவிலுார் ஆகிய இடங்களில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையங்கள் உள்ளது. மாவட்டத்தில் இப்பிரிவுக்கு ஒரு டி.எஸ்.பி., ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தலா ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டரும் பணியமர்த்துவது வழக்கம். மதுவிலக்கு தொடர்பான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய, ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் 2 சப்இன்ஸ்பெக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.