/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆவணங்களின்றி இயக்கிய 6 வாகனங்கள் பறிமுதல்; உளுந்துார்பேட்டையில் ஆர்.டி.ஓ., அதிரடி

ADDED : ஏப் 16, 2025 11:54 PM
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டையில் ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 6 வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியன் தலைமையிலான அலுவலர்கள் உளுந்துார்பேட்டை புறவழிச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வாகனங்களுக்கான தகுதி சான்று, அனுமதி சீட்டு, சாலை வரி, ஓட்டுநர் உரிமம், காப்பீடு சான்றிதழ் ஆகியவை இல்லாமல் இயக்கிய 2 ஆட்டோக்கள், 2 இலகுரக சரக்கு வாகனங்கள், ஒரு டிரைலர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அவற்றிற்கு அபராதமாக 56 ஆயிரம் ரூபாய் மற்றும் சாலை வரி 16 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும் என, உத்திரவிட்டார்.
இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியன் கூறுகையில், 'வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை முறையான ஆவணங்களுடன் இயக்குமாறும், சாலை விதிகளை பின்பற்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயங்கவேண்டும்' என்றார்.