/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணிடம் அத்துமீறல்; ஆசாமிக்கு 6 ஆண்டு சிறை
/
பெண்ணிடம் அத்துமீறல்; ஆசாமிக்கு 6 ஆண்டு சிறை
ADDED : ஜன 09, 2024 07:30 AM
கள்ளக்குறிச்சி : பெண்ணிடம் அத்துமீறிய நபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த நல்லாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் அபிமன்னன் மகன் அய்யப்பன்,30; இவர், கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி அதிகாலை 3:00 மணியளவில் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து, அங்கு துாங்கிக் கொண்டிருந்த திருமணமான 33 வயது பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். அந்த பெண் கூச்சலிட்டதால் அய்யப்பன் தப்பியோடினார்.
இதுகுறித்த புகாரின் பேரில், அய்யப்பனை கைது செய்த கச்சிராயபாளையம் போலீசார், அவர் மீது கள்ளக்குறிச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தமிழ்செல்வி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிஹரசுதன் குற்றம் சாட்டப்பட்ட அய்யப்பனுக்கு 6 ஆண்டு சிறையும், 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், அய்யப்பன் மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.