/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காலணி தொழிற்கல்வி பயிற்சி சேர்க்கை முகாமில் 60 பேர் தேர்வு
/
காலணி தொழிற்கல்வி பயிற்சி சேர்க்கை முகாமில் 60 பேர் தேர்வு
காலணி தொழிற்கல்வி பயிற்சி சேர்க்கை முகாமில் 60 பேர் தேர்வு
காலணி தொழிற்கல்வி பயிற்சி சேர்க்கை முகாமில் 60 பேர் தேர்வு
ADDED : செப் 29, 2025 01:05 AM
கள்ளக்குறிச்சி: மத்திய காலணி தொழிற்பயிற்சி நிறுவனத்தில், காலணி தொழிற்கல்வி பயிற்சிக்கான நேரடி சேர்க்கை முகாமில் கள்ளக்குறிச்சியில் 60 பேர் தேர்வாகினர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் ஆக்ஸாலிஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி கூட்டரங்கில் சென்னை மத்திய காலணி தொழிற்பயிற்சி நிறுவனம் சார்பில் தொழிற்கல்வி பயிற்சிக்கான நேரடி சேர்க்கை முகாம் நடந்தது.
முகாமில் சி.இ.ஓ., கார்த்திகா, மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகோபால், சேர்க்கை தலைவர் காஞ்சனா மாலா, சேர்க்கை அலுவலர் ஆபியா அப்ஷின், சேர்க்கை நிர்வாகிகள் பாலசுப்ரமணியம், கோடீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கலெக்டர் பிரசாந்த் கூறியதாவது; காலணி தொழிற்கல்வி பயிற்சி சேர்க்கை முகாமில் 10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த 120 பேர் பங்கேற்றனர்.
இதில், 60 பேர் தொழிற்பயிற்சிக்கு தேர்வாகினர். மீதமுள்ள மாணவர்கள் பெற்றோர்களின் ஆலோசனைக்கு பிறகு விரைவில் சேர இருக்கின்றனர்.
தேர்வானவர்களுக்கான பயிற்சி சென்னை மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் விரைவில் துவங்கப்படும்.
பயிற்சி முடித்த பிறகு, உளுந்துார்பேட்டை சிப்காட் வளாகத்தில் காலணி தொழிற்சாலையில் வேலை வாய்ப்பில் அமர்த்தப்படுவர்.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்கள் காலணிகள் தொடர்பான தொழிற்கல்வி கற்று விரைவில் உளுந்துார்பேட்டையில் செயல்பட உள்ள காலணி தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு பெற்று பயனடைவர் என கூறினார்.