/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
6.5 கிலோ ஹான்ஸ் பறிமுதல் பெட்டி கடை உரிமையாளர் கைது
/
6.5 கிலோ ஹான்ஸ் பறிமுதல் பெட்டி கடை உரிமையாளர் கைது
6.5 கிலோ ஹான்ஸ் பறிமுதல் பெட்டி கடை உரிமையாளர் கைது
6.5 கிலோ ஹான்ஸ் பறிமுதல் பெட்டி கடை உரிமையாளர் கைது
ADDED : நவ 09, 2025 06:24 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பட்டை அருகே பெட்டி கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்து, 6.5 கிலோ ஹான்ஸ் பறிமுதல் செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த செம்மணங்கூரில் பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் உளுந்துார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது, செம்மணங்கூர் பகுதியைச் சேர்ந்த ஆதிமூலம் மகன் வீரன், 48; என்பவரது பெட்டி கடையில் 6.5 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
வீரனை போலீசார் கைது செய்து, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.