/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதல்வர் கோப்பை மாநில போட்டி கள்ளக்குறிச்சியில் 686 பேர் தேர்வு
/
முதல்வர் கோப்பை மாநில போட்டி கள்ளக்குறிச்சியில் 686 பேர் தேர்வு
முதல்வர் கோப்பை மாநில போட்டி கள்ளக்குறிச்சியில் 686 பேர் தேர்வு
முதல்வர் கோப்பை மாநில போட்டி கள்ளக்குறிச்சியில் 686 பேர் தேர்வு
ADDED : செப் 25, 2025 05:00 AM
கள்ளக்குறிச்சி : முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனித்திறன் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளுக்கு 686 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கடந்த ஆக., 26ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை நடந்தது. இதில் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என 5 பிரிவுகளின் கீழ் போட்டி நடத்தப்பட்டன. வாலிபால், கால்பந்து, கபடி, பென்சிங், நீச்சல், கிரிக்கெட், இறகு பந்து உள்ளிட்ட பல்வேறு குழு விளையாட்டு போட்டிகள் மற்றும் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுல், உயரம் தாண்டுல் உள்ளிட்ட தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட அளவிலான போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டன. மேலும் ஐந்து பிரிவுகளிலும் முதல் இடங்களை பிடித்தவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனித்திறன் போட்டிகளில் 67 பள்ளி மாணவர்கள், 65 கல்லுாரி மாணவர்கள், 24 மாற்றுத்திறனாளிகள், 12 அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பிரிவில் 6 பேர் என மொத்தம் 174 பேர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். அதேபோல் குழு போட்டிகளில் 223 பள்ளி மாணவர்கள், 260 கல்லுாரி மாணவர்கள், 6 மாற்றுதிறனாளிகள், பொதுமக்கள் பிரிவில் 23 பேர் என மொத்தம் 512 பேர் பங்கேற்க உள்ளனர். முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டி சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்துார், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல், தஞ்சாவூர், துாத்துக்குடி, திருநெல்வேலி, வேலுார், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் வரும் அக்., 2 ம் தேதி துவங்கி 14 ம் தேதி வரை நடக்கிறது.