ADDED : ஜூலை 18, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் காய்ச்சு வதற்கு பதுக்கி வைத் திருந்த 700 கிலோ வெல்லத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கல்வராயன்மலை, வாழ்க்குறி கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வெல்லம் பதுக்கி வைத்திருப்பதாக கரியாலுார் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் அதே கிராமத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி அண்ணாதுரை, 48; அவரது சகோதரி வீட்டில் 14 சாக்கு மூட்டையில் 700 கிலோ வெல்லம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் வெல்லத்தை பறிமுதல் செய்து, தலைமறைவான அண்ணாதுரை மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.