/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் குரூப் 2 தேர்வு 7,448 பேர் பங்கேற்பு
/
கள்ளக்குறிச்சியில் குரூப் 2 தேர்வு 7,448 பேர் பங்கேற்பு
கள்ளக்குறிச்சியில் குரூப் 2 தேர்வு 7,448 பேர் பங்கேற்பு
கள்ளக்குறிச்சியில் குரூப் 2 தேர்வு 7,448 பேர் பங்கேற்பு
ADDED : செப் 29, 2025 01:00 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 33 தேர்வு மையங்களில் நடந்த குரூப்2 தேர்வில் 7448 பேர் பங்கேற்று எழுதினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்,அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 2, குரூப் 2 ஏ நேற்று நடந்தது. இதற்காக கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுார் வட்டத்தில் 33 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 9,526 பேர் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று நடந்த தேர்வில் 7,448 பேர் தேர்வு எழுதினர். 2,078 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வினை கண்காணிக்க 2 கண்காணிப்பு அலுவலர்கள், ஒரு பறக்கும் படைகள், 11 சுற்றுக்குழு அலுவலர்கள், 44 தேர்வுக் கூட ஆய்வாளர்கள், 35 வீடியோகிராபர்கள், 48 பேர் போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர். தேர்வு கூடத்திற்குள் மொபைல்போன், மின்னனு சாதனங்கள் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், தேர்வு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வினை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டார். அதில் தேர்வர்களின் எண்ணிக்கை, வருகை, தேர்வு துவங்கிய நேரம், தேர்வு விதிமுறைகள் கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்தார்.