/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் 76வது குடியரசு தினவிழா கோலாகலம்! 377 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கல்
/
கள்ளக்குறிச்சியில் 76வது குடியரசு தினவிழா கோலாகலம்! 377 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கல்
கள்ளக்குறிச்சியில் 76வது குடியரசு தினவிழா கோலாகலம்! 377 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கல்
கள்ளக்குறிச்சியில் 76வது குடியரசு தினவிழா கோலாகலம்! 377 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கல்
ADDED : ஜன 27, 2025 12:54 AM

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 76வது குடியரசு தினவிழா கோலாகலமாக நேற்று நடந்தது. காலை 8.05 மணியளவில் எஸ்.பி., ரஜத்சதுர்வேதி முன்னிலையில், கலெக்டர் பிரசாந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கலெக்டர், எஸ்.பி., இருவரும் திறந்த ஜீப்பில் நின்றவாறு சென்று, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், மாவட்டத்தில் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்ததற்காக 28 போலீசாருக்கு முதலமைச்சர் பதக்கத்துடன் கூடிய சான்றிதழை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். மேலும், அணிவகுப்பில் பங்கேற்ற ஆயுதப்படை, தீயணைப்பு, வனத்துறை, ஊர்க்காவல்படை, என்.சி.சி., ஜே.ஆர்.சி., என்.எஸ்.எஸ்., படை தளபதிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, சிறப்பாக பணிபுரிந்த காவல், தீயணைப்பு மீட்பு பணிகள், வருவாய், நில அளவை, ஊரக வளர்ச்சி, பத்திர பதிவு, மின்சாரம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள், சுகாதார பணிகள் இணை இயக்குநர், துணை இயக்குநர், மாற்றுத்திறனாளி, வேளாண்மை, சித்த மருத்துவம், தாட்கோ, கருவூலம் உட்பட 45 அரசு துறைகளை சேர்ந்த 377 அரசு அலுவலர்கள், ஊழியர்களின் பணியை பாராட்டி கலெக்டர் பிரசாந்த் நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் மல்லர் கம்பம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், சி.இ.ஓ., கார்த்திகா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, வேலைவாய்ப்புத்துறை அலுவலர் முரளிதரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் சந்திரசேகரன், ஏ.டி.எஸ்.பி., சரவணன், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் கந்தசாமி உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிரிழந்த, தியாகதுருகம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமியின் மனைவி ராஜகுமாரி என்பவர் வயது மூப்பு காரணமாக குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை.
இதையொட்டி கள்ளக்குறிச்சி தாசில்தார் பசுபதி ராஜகுமாரியின் வீட்டிற்கு நேற்று முன்தினம் நேரடியாக சென்று, பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

