/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் 78வது சுதந்திர தின விழா கோலாகலம்: கிராம சபை கூட்டத்தில் நலத்திட்ட உதவி
/
மாவட்டத்தில் 78வது சுதந்திர தின விழா கோலாகலம்: கிராம சபை கூட்டத்தில் நலத்திட்ட உதவி
மாவட்டத்தில் 78வது சுதந்திர தின விழா கோலாகலம்: கிராம சபை கூட்டத்தில் நலத்திட்ட உதவி
மாவட்டத்தில் 78வது சுதந்திர தின விழா கோலாகலம்: கிராம சபை கூட்டத்தில் நலத்திட்ட உதவி
ADDED : ஆக 16, 2024 06:36 AM

கள்ளக்குறிச்சியில் சுதந்திர தின விழாவில் கலெக்டர் தேசிய கொடியேற்றி வைத்து, 227 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து குதிரைச்சந்தலில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் 2.53 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். எஸ்.பி., ரஜத்சதுர்வேதி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இதனையடுத்து சிறப்பாக பணிபுரிந்த அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என 227 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
விழாவில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் முருகேசன், சி.இ.ஓ., முருகன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார், டி.எஸ்.பி., தேவராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், நகரமன்ற தலைவர் சுப்ராயலு, மாவட்ட தொழில் மைய மேலாளர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கிராம சபைக் கூட்டம்
மாவட்டத்தில் உள்ள 412 ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் நேற்று நடந்தது. குதிரைச்சந்தலில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் பங்கேற்றார். கூட்டத்தில், ஊராட்சியின் வரவு, செலவு கணக்கு விபரங்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து, கலெக்டர் பேசுகையில், 'மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு தடையின்றி வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.
தொடர்ந்து, வேளாண் துறை சார்பில் சின்னசேலம் ஒன்றியத்தைச் சேர்ந்த 3 பயனாளிகளுக்கு பாரம்பரிய நெல் ரகம் மற்றும் மக்காச்சோள தொகுப்புகளும், தோட்டக்கலைத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள், விதைத்தளைகள் மற்றும் சொட்டுநீர் பாசன உபகரணங்கள் என மொத்தமாக 2.53 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டத்தில் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, திட்ட இயக்குனர்கள் ரமேஷ்குமார், சுந்தர்ராஜன், பி.டி.ஓ.,கள் ரவிசங்கர், செந்தில்முருகன், ஊராட்சி தலைவர் அனு மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.

