/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊராட்சி துணை தலைவருக்கு கத்தி வெட்டு உளுந்துார்பேட்டையில் 8 பேர் கைது
/
ஊராட்சி துணை தலைவருக்கு கத்தி வெட்டு உளுந்துார்பேட்டையில் 8 பேர் கைது
ஊராட்சி துணை தலைவருக்கு கத்தி வெட்டு உளுந்துார்பேட்டையில் 8 பேர் கைது
ஊராட்சி துணை தலைவருக்கு கத்தி வெட்டு உளுந்துார்பேட்டையில் 8 பேர் கைது
ADDED : ஜூலை 20, 2025 07:49 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே ஊராட்சி துணை தலைவர் மற்றும் ஊராட்சி தலைவரின் கணவரை கத்தியால் வெட்டிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய ஆனந்த், 27; இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி துணைத் தலைவர் டேவிட் அந்துவான், 24; மற்றும் ஊராட்சி தலைவர் அனுஷியா கணவர் ஆரோக்கியராஜ், 27; இருவரிடம் தலா ரூ. 30 லட்சம் கடன் கொடுத்துள்ளார். இருவரும் 4 ஆண்டுகளாகியும் வாங்கிய பணத்தை திருப்பி தரவில்லை. இது குறித்து பல முறை கேட்டும் பணம் கிடைக்கவில்லை.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மரிய ஆனந்த் மொபைல்போன் மூலம் டேவிட் அந்துவானை தொடர்பு கொண்டு கடன் தொகையை கேட்டார். அப்போது கடனை திருப்பித் தர முடியாது என கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மரிய ஆனந்த், தனது ஆதர்வாளர்களுடன் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு, டேவிட்அந்துவான் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி தர கோரி தகராறில் ஈடுபட்டனர்.
இதனையறிந்த ஊராட்சி தலைவரின் கணவர் ஆரோக்கியராஜிம் அங்கு சென்றார். அப்போது மரிய ஆனந்த் ஆதரவாளர்கள் டேவிட் அந்துவான் மற்றும் ஆரோக்கியராஜையும் கத்தியால் வெட்டினர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். மண்ணெண்ணெய் பாட்டிலை வீட்டிற்குள் வீசியதால் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.
தகராறின்போது நாய் கடிக்க வந்ததால், மரிய ஆனந்த் ஆதரவாளர்கள் கல்லால் அடித்தில் நாய் இறந்தது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து டேவிட் அந்துவான் கொடுத்த புகாரின் பேரில், எலவனாசூர்கோட்டை போலீசார் 12 பேர் மீது வழக்கு பதிந்து மரிய ஆனந்த், ஜான்சன், 25; டேவிட் குமார், 24; அகஸ்டின், 20; பெர்னான்டஸ், 22; ரோலிங்ராஜ், 23; ஜோலுார்து ஜெரால்டு ஆனந்த், 42; பிரான்சிஸ் சேவியர், 26; ஆகிய 8 பேரை கைது செய்தனர்.