ADDED : செப் 29, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாக்கம் பகுதியில் நேற்று வட பொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது, பிள்ளையார் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன், 53; தமிழ், 29; திருப்பதி, 28; அருண்குமார், 27; அசோக் குமார், 30; சுப்ரமணி, 65; தண்டபாணி, 28; சீனிவாசன், 41; ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.