/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோமுகி அணையில் 800 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
/
கோமுகி அணையில் 800 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
ADDED : அக் 26, 2025 11:01 PM

கச்சிராயபாளையம்: கோமுகி அணையிலிருந்து 800 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில் கச்சிராயபாளையம் மற்றும் கல்வராயன் மலையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் பொட்டியம், கல்படை, பரங்கிநத்தம் ஆகிய ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 1500 கன அடி வீதம் நீர் வர துவங்கியது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது.
நேற்று காலை அணையின் முழு கொள்ளளவான 46 அடியில் தற்போது 44 அடியை எட்டியுள்ளது. ஆறுகளில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் இரவு 8:00 மணி முதல் கோமுகி ஆறு வழியாக வினாடிக்கு 800 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் வரத்தைப் பொறுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மாற்றி அமைக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து அணையின் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

