/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகத்தில் 83 விநாயகர் சிலை பிரதிஷ்டை
/
தியாகதுருகத்தில் 83 விநாயகர் சிலை பிரதிஷ்டை
ADDED : ஆக 27, 2025 11:18 PM

தியாகதுருகம்: தியாகதுருகம் பகுதியில் 83 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடந்தது.
தியாதுருகம் பகுதியில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. களிமண்ணால் செய்த விநாயகர் சிலையை வீடுகளுக்கு வாங்கி சென்று, பக்தர்கள் வழிபாடு நடத்தினர். தியாகதுருகம் பேரூராட்சியில் 23 இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலையும், சுற்றுவட்டார பகுதியில் 60 இடங்களில் விநாயகர் சிலை வைத்து பூஜைகள் நடந்தது. நாளை 29ம் தேதி விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் நடக்கிறது.
சங்கராபுரம் சங்கராபுரம் கடைவீதியில் உள்ள விநாயகர் கோவில், திரவுபதியம்மன் கோவில் தெரு, மீனவர் தெரு, மங்களா தெரு, வடக்கு தெரு, ஆற்றுப்பாதை தெரு, தாலுகா அலுவலகம் அருகில், பூட்டை ரோடு, முருகன் கோவில் வளாகம், பொய்க்குணம் ரோடு, தியாகராஜபுரம் சாலை சந்திப்பு, ஏரிக்கரை ஆகிய இடங்களில் நேற்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டது. 5 வது நாளான வரும் 31ம் தேதி முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று சங்கராபுரம் ஏரியில் விஜர்சனம் செய்யப்படும்.