/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
8,674 மெட்ரிக் டன் விவசாய விளை பொருட்கள் விற்பனை ரூ. 64.16 கோடி: 9 மாதங்களில் கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி சாதனை
/
8,674 மெட்ரிக் டன் விவசாய விளை பொருட்கள் விற்பனை ரூ. 64.16 கோடி: 9 மாதங்களில் கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி சாதனை
8,674 மெட்ரிக் டன் விவசாய விளை பொருட்கள் விற்பனை ரூ. 64.16 கோடி: 9 மாதங்களில் கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி சாதனை
8,674 மெட்ரிக் டன் விவசாய விளை பொருட்கள் விற்பனை ரூ. 64.16 கோடி: 9 மாதங்களில் கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி சாதனை
ADDED : ஜூலை 08, 2024 05:11 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் கடந்த சாகுபடி பருவத்தில் விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்களின் விற்பனை64.16 கோடி ரூபாயை எட்டி சாதனை படைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் எள், உளுந்து மற்றும் மக்காச்சோளம் அதிகளவில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதனால், மார்க்கெட் கமிட்டிக்கு நாள்தோறும் எள், உளுந்து மற்றும் மக்காசோளம் வரத்து அதிகரித்துள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செஞ்சி, திண்டிவனம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், சின்ன சேலம், சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் மார்க்கெட் கமிட்டிகள் இயங்கி வருகின்றன. ஆனால் எள், உளுந்து, மக்காச்சோளம் போன்ற உயர் விளைச்சல் பயிர்கள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், செஞ்சி ஆகிய 5 மார்க்கெட் கமிட்டிகளில் மட்டுமே அதிகளவு வரத்து இருக்கும்.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் கள்ளக்குறிச்சி மாட்டுமின்றி விழுப்புரம், கடலுார், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் நேரில் வந்து பயிர்களின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்கின்றனர்.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த ஆண்டு கடந்த ஜூன் 30 வரையிலான 9 மாத சாகுபடி பருவ காலத்தில் கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு மொத்தமாக 29 ஆயிரத்து 503 விவசாயிகள் 8,674 மெட்ரிக் டன் விவசாய விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.
இந்த விளைபொருட்கள் 64 கோடியே 16 லட்சத்து 2,451 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 3,040 விவசாயிகள் கொண்டு வந்த 3,932 டன் மக்காச்சோளம் 8.76 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.
இதேபோன்று, 18 ஆயிரத்து 558 விவசாயிகள் கொண்டு வந்த 3,063 டன் எள் 40.57 கோடி ரூபாய். 6,291 விவசாயிகள் கொண்டு வந்த 1,378 டன் உளுந்து 12.71 கோடி ரூபாய். 558 விவசாயிகள் கொண்டு வந்த 127 டன் வேர்க்கடலை 1.2 கோடி ரூபாய். 463 விவசாயிகள் கொண்டு வந்த 907 டன் கம்பு 48.50 லட்சம் ரூபாய். 106 விவசாயிகள் கொண்டு வந்த 27.50 டன் சிவப்பு சோளம் 14.19 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இனி வரும், நவம்பர் மாதத்திலிருந்து மக்காச்சோளம், டிசம்பர் மாதத்திலிருந்து உளுந்து, ஏப்ரல் முதல் எள் பயிர்களின் வரத்து அதிகரிக்கும்.
இத்தகவலை கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் சந்தியா தெரிவித்துள்ளார்.