/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.9.5 லட்சம் வர்த்தகம்
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.9.5 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.9.5 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.9.5 லட்சம் வர்த்தகம்
ADDED : மார் 05, 2024 07:30 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 9.5 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கமிட்டிக்கு, மக்காச்சோளம் 133 மூட்டை, உளுந்து, எள் தலா 30, வேர்க்கடலை 10, கொள்ளு 5, எச்.பி., கம்பு 3, தட்டை பயறு 2, பாசிப்பயறு, நாட்டு கம்பு தலா ஒரு மூட்டை உட்பட 215 மூட்டை விளைபொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
சராசரியாக, ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,196 ரூபாய், உளுந்து 8,863, எள் 12,210, மணிலா 7,970, கொள்ளு 5,999, எச்.பி., கம்பு 2,408, தட்டைப்பயறு 3,383, பாசிப்பயறு 6,699, நாட்டு கம்பு 5,885 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக ரூ.9 லட்சத்து 59 ஆயிரத்து 900க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.
சின்னசேலம்
மார்க்கெட் கமிட்டியில் மஞ்சள் பயிர் வரத்து தற்போது துவங்கியுள்ளது. மக்காச்சோளம் 75 மூட்டை, விரலி மஞ்சள் 19, குண்டு மஞ்சள் 4, எள் ஒரு மூட்டை உட்பட 99 மூட்டை விளை பொருட்கள் கொண்டு வரப்பட்டன. சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,211 ரூபாய், விரலி மஞ்சள் 8,500, குண்டு மஞ்சள் 5,800, எள் 12,059 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 3 லட்சத்து 8 ஆயிரத்து 555 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
தியாகதுருகம்
மார்க்கெட் கமிட்டியில் நெல் 481 மூட்டை, உளுந்து 27, மக்காச்சோளம் 16, கொள்ளு 3, கம்பு 2, எள், தட்டை பயறு தலா ஒரு மூட்டை விளை பொருட்கள் கொண்டு வரப்பட்டன. சராசரியாக ஒரு மூட்டை நெல் 3,028 ரூபாய், உளுந்து 9,202, மக்காச்சோளம் 2,173, கொள்ளு 5,189, கம்பு 5,875, எள் 12,861, கொள்ளு 5,189, தட்டைப்பயறு 1,889 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 11 லட்சத்து 26 ஆயிரத்து 996 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

