/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கார் டயர் வெடித்து பெண் மீது மோதி விபத்து
/
கார் டயர் வெடித்து பெண் மீது மோதி விபத்து
ADDED : அக் 21, 2024 04:10 AM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விருத்தாசலம் அடுத்த முகாசபரூர் அடுத்த கோணங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியாகு மகன் ராபர்ட் கென்னடி, 26; டிரைவர்.
இவர், புதுச்சேரி மூலக்குளத்தில் இருந்து விருத்தாசலத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று மதியம் 2:00 மணியளவில் இன்னோவா காரில் சென்றார். காட்டுநெமிலி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, காரின் வலது பின்பக்க டயர் வெடித்தது.
இதனால கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற உளுந்துார்பேட்டை அடுத்த காட்டுநெமிலியைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி சுபதாரணி, 20; மீது மோதியது. இதில் சுபதாரணி படுகாயமடைந்தார். உடன் விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில், உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

