/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலையோரம் நிறுத்தப்பட்ட கார் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
/
சாலையோரம் நிறுத்தப்பட்ட கார் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சாலையோரம் நிறுத்தப்பட்ட கார் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சாலையோரம் நிறுத்தப்பட்ட கார் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
ADDED : ஜன 09, 2024 07:31 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் சாலையோரம் நிறுத்தப்பட்ட கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன், 41; இவர், தனது குடும்பத்துடன் நேற்று மாலை 4:00 மணிக்கு இண்டிகோ காரில், திருக்கோவிலுார் வந்தார்.
பிடாரி அம்மன் கோவில் தெரு, ஈஸ்வரி தியேட்டர் அருகே காரை நிறுத்திவிட்டு, ஜவுளி கடைக்கு சென்றார்.
4:30 மணியளவில் காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகையுடன் தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர்.
தகவல் அறிந்த திருக்கோவிலுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், காரின் முன் பகுதி முழுதும் எரிந்து சேதமானது. இது குறித்து திருக்கோவிலுார் போலீசார் விசாரித்தனர்.