/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கணவரை தாக்கிய மனைவி மீது வழக்கு
/
கணவரை தாக்கிய மனைவி மீது வழக்கு
ADDED : நவ 06, 2024 10:31 PM
கள்ளக்குறிச்சி ; கள்ளக்குறிச்சி அருகே கணவரை தாக்கிய மனைவி உட்பட 7 பேரை தேடிவருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கூத்தக்குடியை சேர்ந்தவர் தாண்டவராயன் மகன் பிரபு,29; இவரது மனைவி கவிதா,24; கடந்த ஒரு மாதமாக கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
கடந்த 1ம் தேதி இரவு 11 மணிக்கு பிரபு, புதுஉச்சிமேட்டில் உள்ள மனைவி கவிதா வீட்டின் வழியே சென்றார். அப்போது கவிதா, அவரது குடும்பத்தினர் தனசேகர், ராமராஜ், வாசு, தனலட்சுமி, கிருஷ்ணசாமி, ரசிகா ஆகியோர் சேர்ந்து பிரபுவை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து பிரபு கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து கவிதா உள்ளிட்ட 7 பேரை தேடிவருகின்றனர்.