/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொய் தகவல் கூறி பதிவு தபால் பெற்ற 3 பேர் மீது வழக்குப் பதிவு
/
பொய் தகவல் கூறி பதிவு தபால் பெற்ற 3 பேர் மீது வழக்குப் பதிவு
பொய் தகவல் கூறி பதிவு தபால் பெற்ற 3 பேர் மீது வழக்குப் பதிவு
பொய் தகவல் கூறி பதிவு தபால் பெற்ற 3 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : ஜன 09, 2024 07:32 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கனந்தலில் தபால்காரராக பணிபுரிபவர் முத்து, 32; கடந்த டிசம்பர் 18ம் தேதி கச்சிராயபாளையத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் ராமன் பெயருக்கு பதிவுத் தபால் வந்தது. தபாலை எடுத்துச் சென்ற முத்து, கச்சிராயபாளையத்தில் இருந்த ரமேஷ் என்பவரிடம் ராமன் குறித்து கேட்டார்.
அப்போது, ரமேஷ் அதே பகுதியை சேர்ந்த ராமன் மகன் பாலன் என்பவருக்கு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அங்கு வந்த பாலன், தனது தந்தைதான் ராமன் எனக் கூறி பதிவுத் தபாலை பெற்றுள்ளார். இந்நிலையில், பாலன் பொய்யான தகவலைக் கூறி பதிவுத் தபாலை பெற்றுக்கொண்டது முத்துவுக்கு தெரிந்தது. இது தொடர்பாக விசாரித்த போது பாலன் தவறை ஒப்புக்கொண்டு, பதிவுத்தபாலை தருவதாக தெரிவித்தவர், இதுவரை தரவில்லை.
இது குறித்து முத்து அளித்த புகாரின் பேரில், பாலன், செல்வராஜ், கோபி ஆகிய 3 பேர் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.