/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு
/
சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு
ADDED : மார் 06, 2024 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வது சிறுவன். பிளஸ் 2 படித்து வரும் இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2 ம் தேதி மாலை சிறுவன் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று முத்தம் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

