/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயிக்கு மிரட்டல் ஒருவர் மீது வழக்கு
/
விவசாயிக்கு மிரட்டல் ஒருவர் மீது வழக்கு
ADDED : செப் 30, 2024 06:36 AM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே நிலத் தகராறில் விவசாயியை மிரட்டியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சின்னசேலம் அடுத்த வானக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன், 60; விவசாயி. மூங்கில்பாடியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இருவரது நிலமும் அருகருகே உள்ளது. இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி காலை, நடேசன் பயிரிட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான சேனை கிழங்கு பயிர்களை மணிவண்ணன் பிடிங்கி போட்டுள்ளார்.
இதனை தட்டிக்கேட்ட நடேசனின் தம்பி சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
புகாரின் பேரில் மணிவண்ணன் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.