/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்கு
/
கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்கு
ADDED : பிப் 21, 2024 01:34 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக கணவன், மனைவி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகரை சேர்ந்தவர் பெருமாள் மகன் சந்திரன்,64; ஏமப்பேரை சேர்ந்த பாலசுந்தரம் மகன் பார்த்திபன் என்பவர் தனியார் நிறுவனத்தில் லோன் பெறுவதற்காக சந்திரன் ஜாமின் கையெழுத்து போட்டுள்ளார். இந்நிலையில் லோன் சரியாக கட்டாததால், லோன் வழங்கிய நிறுவனம் நீதிமன்றம் மூலம் சந்திரனுக்கு சம்மன் அனுப்பியது.
கடந்த 2ம் தேதி சந்திரன் ஏமப்பேரில் உள்ள பார்த்திபன் வீட்டிற்கு சென்று சம்மன் குறித்து கேட்டுள்ளார். அப்போது, பார்த்திபனும் மற்றும் அவரது மனைவி யோகராணியும் சந்திரனை அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், கணவன் பார்த்திபன், மனைவி யோகராணி ஆகிய இருவர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

