/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அங்கன்வாடி மையத்தில் புகுந்த நாகபாம்பு
/
அங்கன்வாடி மையத்தில் புகுந்த நாகபாம்பு
ADDED : அக் 28, 2024 10:37 PM

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் அங்கன்வாடி மையத்திற்குள் புகுந்த நாக பாம்பால் பரபரப்பு நிலவியது.
சங்கராபுரம் ஆற்றுப்பாதை தெருவில் உள்ள இந்து தொடக்க பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு 20 குழந்தைகள் பயில்கின்றனர். நேற்று காலை 8:00 மணியளவில் குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு வருவதற்கு முன் ஊழியர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு, 5 அடி நீளமுள்ள நாக பாம்பு பதுங்கியிருந்தது தெரியவந்ததும். அலறியடித்து வெளியே ஓடி வந்தார்.
தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கு பதுங்கி இருந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்து வனபகுதிக்குள் விட்டனர்.