/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரில் பள்ளம்
/
வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரில் பள்ளம்
ADDED : செப் 09, 2025 06:25 AM
கள்ளக்குறிச்சி : வி.ஏ.ஓ., அலுவலகம் முன் திறந்து கிடக்கும் குடிநீர் பைப் லைன் பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு குடிநீர் பைப் லைன் கேட் வால்வு பள்ளத்தின் கான்கிரீட் ஸ்லாப் மூடி கடந்த பல மாதங்களுக்கு முன்பு உடைந்தது. அதனை அகற்றிவிட்டு புதிய சிமெண்ட் சிலாப் மூலம் மூட கான்கிரீட் சிமெண்ட் சிலாப் தயாரானது.
ஆனால், அதனை முறையாக வைத்து மூடவில்லை. கடந்த பல மாதங்களாக பள்ளம் திறந்து கிடக்கிறது. இதனால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே, வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரில் திறந்து கிடக்கும் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.