தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குடிபோதையில் தகராறு ஒருவர் கைது

குடிபோதையில் தகராறு ஒருவர் கைது

குடிபோதையில் தகராறு ஒருவர் கைது


ADDED : ஆக 25, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மொபைல் போனில் பாட்டை நிறுத்தச் சொன்னதால் ஏற்பட்ட தகராறில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி, 43; இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பின்னால் மொபைல் போனில் பாட்டு கேட்டுக் கொண்டே மது அருந்தினார்.

அப்போது சின்னக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சரவணன், 39; கிருஷ்ணசாமி மகன் சரவணன், 45; சந்தோஷ், 48; ஆகியோர் பொன்னுசாமியிடம் பாட்டை நிறுத்தும்படி கூறியுள்ளனர்.

இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, சரவணன் தரப்பினர் பீர் பாட்டிலால் பொன்னுசாமியை தாக்கினர். படுகாயமடைந்த அவர் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பொன்னுசாமி கொடுத்த புகாரின்பேரில் சரவணன், சந்தோஷ் உட்பட 3 பேர் மீது திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டன் மகன் சரவணனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us