ADDED : அக் 22, 2025 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மழையால் நெடுஞ்சாலையில் புளியமரம் விழுந்தது.
உளுந்துார்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில் இருந்து நகர் மேம்பாலம் செல்லும் வழியில் நெடுஞ்சாலையோரம் இருந்த புளியமரம் சாலையில் சரிந்து விழுந்தது.
இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையறிந்த போக்குவரத்து போலீசார், அவ்வழியாக வந்த வாகனங்களை மாற்று பாதையில் செல்வதற்கு ஏற்பாடு செய்தனர்.
உடன் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகர் ஊராட்சி நிர்வாகம் மூலம் சாலையில் விழுந்த புளிய மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். காலை 11 மணியளவில் போக்குவரத்து சீரானது.