/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் சாதனை நிகழச்சி
/
சங்கராபுரத்தில் சாதனை நிகழச்சி
ADDED : அக் 03, 2025 11:26 PM

சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சுவாமி விவேகானந்தர் மரபுவழி சிலம்பம் குருகுல அறக்கட்டளை சார்பில் இம்பாசிபிள் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை நிகழ்ச்சி நடந்தது.
இதில் சேலம், தர்மபுரி, பெரம்பலுார், ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
சிலம்பம், கராத்தே, குங்பூ, யோகா, பரதநாட்டியம், இசை, சதுரங்கம், ஓவியம் உள்ளிட்ட விளையாட்டுக்களை மாணவர்கள் தொடர்ந்து மூன்று மணி நேரம் நிகழ்த்தி இம்பாசிபில் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம் பிடித்தனர். விளையாட்டில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் அசோகன் ஆசான், சூரியமூர்த்தி, சொக்கலிங்கம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தாமோதரன், மாஸ்டர் திருமால் ஆகியோர் பதக்கங்களை வழங்கினர்.