/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி நகர பகுதியில் தீப்பற்றி எரிந்த ஜெனரேட்டர்
/
கள்ளக்குறிச்சி நகர பகுதியில் தீப்பற்றி எரிந்த ஜெனரேட்டர்
கள்ளக்குறிச்சி நகர பகுதியில் தீப்பற்றி எரிந்த ஜெனரேட்டர்
கள்ளக்குறிச்சி நகர பகுதியில் தீப்பற்றி எரிந்த ஜெனரேட்டர்
ADDED : அக் 16, 2024 04:41 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்புக்கு அருகே, கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்த ஜெனரேட்டர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதிக்கு அருகே தனியார் சூப்பர் மார்க்கெட் கட்டடத்தின் மொட்டை மாடியில் ஜெனரேட்டர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 8.50 மணியளவில் ஜெனரேட்டர் திடீரென தீ பற்றி எரிந்து, புகை கசிந்தது. நகரின் மையப்பகுதியில் திடீரென புகை கசிந்து வெளியேறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான வீரர்கள் நேற்று காலை 9.10 மணியளவில் சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயிணை அணைத்தனர். நல்வாய்ப்பாக பெரிய அளவிலான சேதம் ஏதும் ஏற்படவில்லை.