/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஒரு தலைக்காதல்: இளைஞர் தற்கொலை
/
ஒரு தலைக்காதல்: இளைஞர் தற்கொலை
ADDED : நவ 10, 2024 06:06 AM
கள்ளக்குறிச்சி : தச்சூரில் பெண் காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இளைஞர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி தச்சூரில் இளைஞர் ஒருவர் துாக்கில் தொங்குவதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.
அதில், துாக்கில் தொங்கியவர் தச்சூர் கிராமத்தை சேர்ந்த கருத்திருமன் மகன் கமல் (எ) காமராஜ்,25; என்று தெரிந்தது. இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ரத்த பரிசோதனை கூடத்தில் பணிபுரியும் கமல், அந்தப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்துள்ளார். கமலின் காதலுக்கு பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் மனவிரக்தியில் இருந்த கமல் விளைநிலத்தில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிந்தது.
கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.