தற்கொலைக்கு முயன்ற நபர் எஸ்.பி., அலுவலகத்தில் பரபரப்பு
தற்கொலைக்கு முயன்ற நபர் எஸ்.பி., அலுவலகத்தில் பரபரப்பு
ADDED : ஜன 20, 2026 06:43 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில், நில பிரச்னை தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து விவசாயி டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த நபர் தனக்கு, தானே டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்ததில், ஊ.நெமிலி கிராமத்தை சேர்ந்த முத்தையன் மகன் ஏழுமலை, 30; என தெரியவந்தது.
விசாரணையில், ஏழுமலைக்கும் இவரது மூத்த சகோதரர் கிருஷ்ணன் என்பவருக்கும் பொதுவில் 2 ஏக்கர் விளைநிலம் தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. விளைநில கிணற்றில் உள்ள மின் மோட்டாரை கிருஷ்ணன் எடுத்துச் சென்றதால், பயிர் செய்ய முடியவில்லை என ஏழுமலை உளுந்துார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து ஏழுமலை மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
