/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமியிடம் அத்துமீறல் போக்சோவில் ஒருவர் கைது
/
சிறுமியிடம் அத்துமீறல் போக்சோவில் ஒருவர் கைது
ADDED : செப் 28, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார: அரகண்டநல்லுார் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
முகையூர் அடுத்த இருதய புரத்தைச் சேர்ந்தவர் பாக்கியம் மகன் பவுல் புஷ்பராஜ், 40; நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் இருக்கும் ஒரு மளிகைக் கடைக்குச் சென்றார்.
அங்கு வெற்றிலை பாக்கு வாங்க வந்த 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், அரகண்டநல்லுார் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து புஷ்பராஜை கைது செய்தனர்.