/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆசனுார் , எலவனாசூர்கோட்டையில் தி . மு . க ., சாதனை விளக்க கூட்டம்
/
ஆசனுார் , எலவனாசூர்கோட்டையில் தி . மு . க ., சாதனை விளக்க கூட்டம்
ஆசனுார் , எலவனாசூர்கோட்டையில் தி . மு . க ., சாதனை விளக்க கூட்டம்
ஆசனுார் , எலவனாசூர்கோட்டையில் தி . மு . க ., சாதனை விளக்க கூட்டம்
ADDED : ஜூலை 07, 2025 02:19 AM

உளுந்துார்பேட்டை: ஆசனுார், எலவனாசூர்கோட்டையில் தி.மு.க.,சார்பில், அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது.
தி.மு.க., இளைஞரணி சார்பில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர்கள் ராஜவேல், வைத்தியநாதன் தலைமை தாங்கினர். நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் டேனியல்ராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அருண்ராஜ் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் ரவிச்சந்திரன், இளம் பேச்சாளர் ஷாநவாஸ் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், செல்லையா, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அலெக்சாண்டர், பாண்டியன், ஊராட்சி தலைவர் நந்தகுமார், துணைத் தலைவர் சம்ஷாத், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் நரேஷ், நகராட்சி கவுன்சிலர்கள் கலா சுந்தரமூர்த்தி, முருகவேல், குருமனோ, துணை ஒருங்கிணைப்பாளர் நீதிபதி, ஒன்றிய துணைச் செயலாளர் தங்க விசுவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.