/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை கள்ளக்குறிச்சியில் மர்ம நபர் துணிகரம்

ADDED : நவ 01, 2024 11:19 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி, மந்தை வெளியில் சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலிலில், நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் அர்ச்சகர் வெங்கட்ராயன் பூஜைக்காக கோவிலை திறந்தார்.
அப்போது, உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் மற்றும் கைரேகை பிரிவு நிபுணர்கள் நேரில் சென்று தடயங்களை சேகரித்தனர்.
பக்தர்கள் அதிகளவில் வந்து செல்லும் நிலையில், கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தும், முறையான பராமரிப்பு இல்லாததால், பழுதாகியிருந்ததால் கொள்ளையில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது குறித்த தகவல்களை திரட்ட முடியாத நிலை ஏற்பட்டது.
இருப்பினும், போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்னர்.