/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் விற்பனை; ஒருவர் கைது
/
மதுபாட்டில் விற்பனை; ஒருவர் கைது
ADDED : மே 27, 2025 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மதுபாட்டில் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த நெடுமானுார் கிராமத்தில், கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது முனியன் மகன் நாகமணி, 45; என்பவர் வீட்டின் பின்புறம் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்று கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார், 10 குவாட்டர் மதுபாட்டில், 300 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.