/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பண்பாட்டு கழக சிறப்பு கூட்டம்
/
பண்பாட்டு கழக சிறப்பு கூட்டம்
ADDED : செப் 19, 2024 11:51 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பண்பாட்டுக் கழக சிறப்பு கூட்டத்தில் முன்னாள் செயலாளர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
திருக்கோவிலுார் பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் செயலாளரும், தற்போதைய செயற்குழு உறுப்பினருமான எத்திராஜன் கடந்த 5ம் தேதி காலமானார்.
இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பண்பாட்டுக் கழகத்தின் சிறப்பு கூட்டம், பண்பாட்டுக் கழக அலுவலகத்தில் நடந்தது.
பண்பாட்டுக் கழகத் துணைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
பண்பாட்டுக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பண்பாட்டு கழகத்தில் எத்திராஜனின் பங்களிப்பு குறித்த நினைவு உரையாற்றி ஒருமனதாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.