/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வெட்டப்பட்ட மரங்களுக்கு கண்ணீர் அஞ்சலி
/
வெட்டப்பட்ட மரங்களுக்கு கண்ணீர் அஞ்சலி
ADDED : செப் 25, 2024 06:47 AM

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அரசு பாலிடெக்னிக் அருகே நெடுஞ்சாலைத்துறையால் வெட்டப்பட்ட மரங்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி பசுமைத் தாயகம் சார்பில் போராட்டம் நடந்தது.
திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையில், அரகண்டநல்லுார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அருகே ரவுண்டானா அமைப்பதற்காக நெடுஞ்சாலை துறை சார்பில், அப்பகுதியில் இருந்த ஏராளமான பனை மரங்கள், வேப்பமரம் உள்ளிட்ட பல வகையான மரங்கள் வெட்டப்பட்டன.
எஞ்சி இருக்கும் ஆலமரத்தை அகற்ற நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு இருப்பதாக கூறி, இனி அப்பகுதியில் இருக்கும் மரங்களை வெட்டக்கூடாது. அப்படியே அவசியமாக இருந்தாலும் அதனை அகற்றி வேறு இடத்தில் நட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி, பசுமைத்தாயகம் கட்சியின் சார்பில் வெட்டப்பட்ட மரங்களுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பா.ம.க., விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பால சக்தி தலைமை தாங்கினார். பசுமைத்தாயகம் மாநில துணைச் செயலாளர்கள் பொன்மலை, கண்ணன், நிர்வாகிகள் மணிகண்டன், குமரகுரு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.