/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக்கிலிருந்து விழுந்த வாலிபர் பலி
/
பைக்கிலிருந்து விழுந்த வாலிபர் பலி
ADDED : மார் 18, 2024 05:52 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே பைக்கில் இருந்து விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் மகன் ராசு, 24; சூளாங்குறிச்சியில் உரக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு 8:30 மணியளவில் கள்ளக் குறிச்சி ஜே.ஜே., நகர் வழியாக பைக்கில் வீட்டிற்கு சென்றார்.
ஜே.ஜே., நகர் பகுதியில் தரைப்பாலம் கட்டும் பணி நடந்ததால், மாற்று வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு, சாலையின் குறுக்கே கருங்கற்கள் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சாலையின் நடுவே உள்ள கல்லில் ராசு சென்ற பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், துாக்கி வீசப்பட்ட ராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

