/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது
/
வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது
ADDED : அக் 16, 2024 04:17 AM
திருக்கோவிலுார்: அரகண்டநலலுார் அருகே வீட்டுக்குள் புகுந்து பணம் மற்றும் பூஜை பொருட்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரகண்டநல்லுார் அடுத்த வீரசோழபுரம் காலனியைச் சேர்ந்தவர் கதிர்வேல் மகன் வசந்தகுமார், 34; கடந்த 12ம் தேதி காலை 10:00 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருந்தார்.
மறுநாள் காலை வந்து பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரம் பணம், பித்தளை குத்து விளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில், அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் சவுந்தர், 22; கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம் மற்றும் பித்தளை பூஜை பொருட்களை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.